கருங்கல், செம்மண் கடத்தல் லாரிகள் பறிமுதல்; டிரைவர்கள் கைது
பனமரத்துப்பட்டி: சேலம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்-குனர் சுமதி தலைமையில் அதிகாரிகள், பனமரத்துப்பட்டி பிரிவில், நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டம் கீரனுாரில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அனுமதி இல்லாமல், 12 டன் கருங்கல் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்
படைத்தனர். சுமதி புகார்படி, சேலம், லைன்மேட்டை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் கணபதி, 36, என்பவரை, மல்லுார் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் கருமலைக்கூடல் போலீசார் திப்பம்பட்டி -மோட்டூர் பிரிவில் நேற்று மதியம், 2:30 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டூர், ராமன் நகர், திப்பம்பட்டியை சேர்ந்த டிரைவர் முருகன், 42, என்பவர், 1.5 யுனிட் செம்-மண்ணை, பொறையூர் காட்டுவளவில், டிப்பர் லாரியில் ஏற்றி சட்டவிரோதமாக விற்க கடத்தி சென்றது தெரிந்தது. லாரியை பறி-முதல் செய்த போலீசார், தொடர்ந்து முருகனையும் கைது செய்-தனர்.