சாம்பல் ஏற்றி வந்த லாரியின் டேங்கர் பள்ளத்தில் கவிழ்ந்தது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே 40 டன் சாம்பல் ஏற்றி வந்த லாரியின் டேங்கர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தூத்துக்குடியில் இருந்து 40 டன் சாம்பல் லோடு டேங்கரில் ஏற்றிக்கொண்டு வந்த லாரி தூத்துக்குடி-- மதுரை நான்கு வழி சாலை வழியாக கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. பாலையம்பட்டி முத்தரையர் நகர் சந்திப்பில் லாரியின் பின்னால் இருந்த டேங்கர் தனியாக கழன்று சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

எதிரே எந்தவித வாகனங்களும் வராததால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் எதுவும் இல்லை.

கிரேன் உதவியுடன் டேங்கரில் இருந்த சாம்பல் வேறு லாரிகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டது.

Advertisement