அரசு பள்ளி மாணவிகள் கல்வி சுற்றுப்பயணம்

வானுார்: புதுச்சேரியில் உள்ள சின்னத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆரோவில் பகுதிக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இந்த பயணத்தின் போது, மாத்ரி மந்திர், பாரத் நிவாஸ், பார்வையாளர் மையம், சாவித்ரி பவன் மற்றும் பாரத் நிவாசில் உள்ள கலாகேந்திரா போன்ற முக்கிய இடங்களைப் சுற்றி பார்த்தனர்.

தொடர்ந்து, ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி முயற்சியால் துவங்கப்பட்ட காட்டுஜீவிகள் கலைக் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

சாவித்ரி பவனில் மாணவர்களுக்கு, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் ஆன்மிக பயணம், அவர்களின் உறுதியான தொலைநோக்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், ஆரோவிலின் கல்வி மற்றும் பன்முகத்திறன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஸ்ரீ அரவிந்தோ இன்டர்நேஷனல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Advertisement