அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு விழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849026.jpg?width=1000&height=625)
கடலுார்: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
மாணவர்களுக்கு கபடி, தொடர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், பெற்றோருக்கு இசை நாற்காலி, பலுான் வெடித்தல் போட்டிகளும், ஆசிரியர்களுக்கு லெமன் ஸ்பூன், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டது.
விழாவில், இயக்குநர்கள் கார்த்திகேயன், செல்வராசு, ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், வேலு, திராவிட அரசு உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார்.
துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.