விசைபடகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவி குறித்து மீனவர்களுக்கு பயிற்சி

தொண்டி : மீனவர்களுக்கு வழங்கப்பட்ட டிரான்ஸ்பாண்டர் கருவியை பயன்படுத்துவது குறித்து மீன்வளத்துறையினர் பயிற்சி அளித்தனர்.

விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலின் போது தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட்டது.

இக்கருவியை பயன்படுத்துவது குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சோலியக்குடி லாஞ்சியடியில் நடந்தது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், டிரான்ஸ்பாண்டர் மூலம் புயல், சூறாவளி போன்ற ஆபத்து ஏற்படும் போது மீன்வளத்துறை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும்.

ஆழ்கடலில் படகு நிலை கொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், காளீஸ்வரன், மரைன் எஸ்.ஐ., அய்யனார், மீன்வள மேற்பார்வையாளர் சரத், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement