பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849023.jpg?width=1000&height=625)
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் கிராம மக்கள் இலவச மனைபட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த டி.வி., புத்துாரில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்குவதாக வருவாய்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகலறிந்து வந்த தாசில்தார் உதயகுமார், அதிகாரி களிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.