தனியார் பஸ் மோதல் ஆட்டோ டிரைவர் காயம்

நெல்லிக்குப்பம்: தனியார் பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்தார்.

கடலுாரில் இருந்து நேற்று மாலை பண்ருட்டி நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு அருகில் வந்த போது, எதிரில் மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி,47; என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது பஸ் மோதியது. இதில், ஆட்டோ மற்றும் பஸ்சின் முன் பகுதி சேதமானது.

ஆட்டோவில் சிக்கி படுகாயமடைந்த புண்ணியமூர்த்தியை அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக கடலுார்-பண்ருட்டி சாலையில் மாலை 6:00 மணி முதல் 6:10 வரை 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement