ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. பழைய கட்டடம் இடிக்கப்பட்டபோது, அலுவலகம் தற்காலிகமாக சோமசுந்தரம் தெருவில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

தற்போது வரை அங்குதான் இயங்கி வருகிறது. புதிய கட்டட பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிய கட்டடத் திறப்பு விழாவை விரைந்து நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பத்திர எழுத்தர்கள் வலியுறுத்தி அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement