குப்பையை உரமாக்குக

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டுகளில் சேரும் குப்பையை பேரையூர் ரோட்டில் குப்பை கிடங்கில் சேகரிக்கின்றனர். இங்கு மக்கும், மக்காத குப்பையை தரம்பிரித்து உரமாக்கும் பணிகள் நடக்காமல் உள்ளது.

குப்பை இருக்கும் பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் ஏற்படும் புகையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதைதவிர்த்து குப்பையை முறையாக உரமாக்கி அகற்ற கோரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு நிர்வாகிகள் பொன்ஆதிசேஷன், ரமேஷ், சின்னகொடி உள்ளிட்டோர் நகராட்சி கமிஷனர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர்.

Advertisement