தைப்பூச சிறப்பு பஸ்கள்

மதுரை : பிப். 11 ல் தைப்பூசம் நாளை முன்னிட்டு பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் பிப். 9. முதல் 12 வரை 990 சிறப்பு பஸ்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சியில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து ஊர் திரும்ப ஏதுவாகவும் பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா பஸ்களுக்கு காத்திருப்பது, கடைசி நேர கூட்ட நெரிசல், கால நேர விரயத்தை த விர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் https://www.tnstc.in மற்றும் TNSTC Mobile App செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.

பயணிகளுக்கு உதவிட முக்கிய பஸ்ஸ்டாண்டுகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, மேலாண் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

Advertisement