வழுதாவூர் சாலையில் இன்று வாகனங்கள் செல்ல தடை 

புதுச்சேரி : கதிர்காமம் கோவில் திருவிழா காரணமாக இன்று 7ம் தேதி வழுதாவூர் சாலையில் அனைத்து வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து எஸ்.பி., செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி கதிர்காமம் முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று 7 ம் தேதி நடக்கிறது. கோவில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் இன்று அதிகாலை முதல் இரவு 10:00 மணி வரை வழுதாவூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் சிக்னலில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சந்திப்பு செல்லவும், அதே சாலையில் திரும்பி வரவும் எந்தவித வாகனங்களும் அனுமதி இல்லை.

ராஜிவ் சிக்னலில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இந்திரா சிக்னல், ரெட்டியார்பாளையம், உழவர்கரை, மூலக்குளம் வலதுபுறம் திரும்பி குண்டு சாலை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும். அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ராஜிவ் சிக்னல் வரும் அனைத்து வாகனங்களும், கனரக வாகன முனையம், ஜிப்மர் கோரிமேடு வழியாக சென்று அங்கிருந்து ராஜிவ் சிக்னல் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement