மதுரை - போடி ரயில் நேரம் மாற்றம்
மதுரை : மதுரை - போடி வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - போடி ரயில்கள் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தன. போடி-- -சென்னை ரயில், சென்னை - மதுரை இடையே மின்சார இன்ஜினிலும் மதுரை - போடி இடையே டீசல் இன்ஜினிலும் இயக்கப்பட்டு வந்தன. 2024 தீபாவளி அன்று மதுரையில் இந்த ரயிலின் இன்ஜின் மாற்றுவதில் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மதுரை - போடி வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு பிப். 2ல் சோதனை ஓட்டம் நிறைவுற்றது. பிப். 4 முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்ஜின் மாற்றுவது தவிர்க்கப்படுவதால் பயண நேரத்தில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது.
பிப். 10 முதல் காலை 8:20மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பாசஞ்சர் 8:34க்கு வடபழஞ்சி, 8:54க்கு உசிலம்பட்டி, 9:14க்கு ஆண்டிபட்டி, 9:28க்கு தேனி வழியாக காலை 10:20மணிக்கு போடி செல்லும். மறுமார்க்கம் மாலை 6:00 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் 6:13க்கு தேனி, 6:29க்கு ஆண்டிபட்டி, 6:47க்கு உசிலம்பட்டி, இரவு 7:13க்கு வடபழஞ்சி வழியாக இரவு 7:50க்கு மதுரை வரும்.
பிப். 10 முதல் இரவு 10:30க்கு சென்னை சென்ட்ரலில் புறப்படும் போடி ரயில் மறுநாள் காலை 7:10க்கு மதுரை,7:54க்கு உசிலம்பட்டி, 8:13க்கு ஆண்டிபட்டி, 8:28 க்கு தேனி வழியாக காலை 9:10க்கு போடி செல்லும். மறுமார்க்கம் பிப். 11 முதல் இரவு 8:50க்கு புறப்படும் சென்னை ரயில் 9:03க்கு தேனி, 9:18 க்கு ஆண்டிபட்டி, 9:38 க்கு உசிலம்பட்டி, 10:40க்கு மதுரை, 11:42க்கு திண்டுக்கல் வழியாக மறுநாள் காலை 7:55க்கு சென்னை சென்ட்ரல் செல்லும்.
மேலும்
-
வெள்ளிக்குறிச்சி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை
-
விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை
-
நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களை கண்காணியுங்க; அவசர வேலையாக வெளியூர் செல்வோர் அவதி
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்