கல்வி கடன் விபரத்தை விற்ற வங்கி: இழப்பீடுடன் வருத்தம் தெரிவித்து கடிதம்
நாமக்கல்: கல்வி கடன் விபரத்தை விற்ற வழக்கில், சம்பந்தபட்ட வங்கி, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதுடன், வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளை-யத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் அருண் பிரசாத், 35. கடந்த, 2007 நவம்பரில் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்றில், இரண்டு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய்- கல்வி கடன் பெற்றுள்ளார். அவரது தந்தை கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். சரிவர கடன் தொகை செலுத்தா-ததால், 2017 மார்ச் மாதத்தில் அருண் பிரசாத், அவரது தந்தை மீது சிவில் நீதிமன்றத்தில் வங்கி வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து, 2017 ஏப்ரலில் வங்கிக்கு கடனை செலுத்தி விட்-டனர். கடன் முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை, அருண் பிரசாத்-துக்கு வங்கி வழங்கி உள்ளது.கடனை செலுத்திய பின்னரும் மனோகரன், அருண் பிரசாத் வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. மேலும், இவர்களு-டைய வங்கி கடன் கணக்கை, ரிலையன்ஸ் அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனிக்கு வங்கி விற்று விட்டது. மனோகரனும், அருண் பிரசாத்தும் ஏழு லட்சம் செலுத்த வேண்டும் என, அந்நிறுவனத்-தினர் கேட்டு வந்தனர்.
அதிர்ச்சியடைந்த அருண்பிரசாத், வங்கியின் மீதும், அசட்ஸ் ரீ கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி-பதி ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த ஜன., 7 ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்-தவர்களுக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயை வங்கி வழங்கவும், முடிக்கப்பட்ட கடன் கணக்கை தனியார் நிறுவனத்திற்கு
விற்பனை செய்தது தவறு என்று மன்னிப்பு கடிதம் வழங்கவும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அருண்பிரசாத்திற்கு இழப்பீடு வழங்கிய வங்கி, அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என, வங்கி சார்பில் கடிதமும் வழங்கியுள்ளது. மேலும் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி விட்டதாக, வங்கி சார்பில் நேற்று நுகர்வேர் நீதிமன்-றத்தில் தகவலை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்
-
வெள்ளிக்குறிச்சி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை
-
விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
பள்ளிக்கு ஊர் மக்கள் சீர் வரிசை
-
நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களை கண்காணியுங்க; அவசர வேலையாக வெளியூர் செல்வோர் அவதி
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்