'புட் பாய்சன்' ஏற்படுத்திய ஓட்டலுக்கு சீல்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ப்ரீடா ஓட்டலில், இரு நாட்களுக்கு முன் 'கிரில் சிக்கன்' சாப்பிட்டவர்களில் 15 பேர் சோழவந்தான் அரசு மற்றும் பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். அந்த ஓட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இந்த ஓட்டலில் பிப். 4 ல் 'கிரில் சிக்கன்' சாப்பிட்டவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 29 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டலில் இருந்து பலசரக்கு, மசாலா பொடிகள், பயன்படுத்திய எண்ணெய் ஆகியவற்றை சேகரித்த உணவுப்பாதுகாப்புத்துறையினர் அவற்றை மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள மைக்ரோ பயாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஓரிரு நாளில் முடிவுகள் தெரிய உள்ள நிலையில் ஓட்டலின் லைசென்ைஸ 15 நாட்களுக்கு தற்காலிகமாக ஆன்லைன் முறையில் உணவுப்பாதுகாப்புத்துறை ரத்து செய்தது. ஓட்டல் சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மாதிரி பாதுகாப்பற்றது என வந்தால் நீதிமன்ற நடவடிக்கையும், சுகாதாரமற்றது என வந்தால் டி.ஆர்.ஓ.,நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றனர்.

Advertisement