குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள்

கோவை; கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூரை சேர்ந்தவர் பிரபாகரன், 45; இரும்பு கிரில் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மதுரையை சேர்ந்த வாணி பிரியா, 40 என்பவருக்கும் திருமணமாகி, 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் வாணி பிரியாவுக்கு சூலுார், வெங்கிடாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரனுடன், 44. பழக்கம் ஏற்பட்டது. இதனால், மகேந்திரன் அடிக்கடி வாணி பிரியா வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

நேற்றுமுன்தினம் மகேந்திரன், வாணி பிரியாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கு வந்த கணவர் பிரபாகரன், மகேந்திரனை அரிவாளால் கழுத்தில் வெட்டினார். தடுக்க வந்த வாணி பிரியாவுக்கும் வெட்டு விழுந்தது. மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாணி பிரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டத.

இதையடுத்து வீட்டில் இருந்த தனது மகனை அழைத்துக்கொண்டு, வீட்டை வெளியில் இருந்து பூட்டி விட்டு சென்றார். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்தனர். பிரபாகரனின் மொபைல் டவர், சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement