ஜோசப் கல்லுாரியில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி
விழுப்புரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை, கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் வரவேற்றார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விழாவில் நிர்வாகி கமலா ஜோசப், இயக்குனர் யாஸ்மின் பிரபாகர், ஜோஷ்வா, கவாஸ்கர், பால்ராஜ், கதிர்வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement