சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் கைது
அரியாங்குப்பம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை, போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்தார். இவருக்கும், அதே கடையில் வேலை பார்க்கும் கடலுாரை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 29ம் தேதி, வேலைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ பிரிவில், வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், சிறுமியை, அவருடன் வேலை செய்த சிறுவன் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது, தெரியவந்தது.
அதன்பேரில் தலைமறைவாக இருந்த சிறுவனை, போலீசார் நேற்று முன்தினம் கடலுாரில் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.