மார்க்சிஸ்ட் கூட்டம்
மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு 2ம் பகுதிக் குழுவின் டி.வி.எஸ்., நகர் கிளை பரிசீலனைக் கூட்டம் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.
முத்துப்பட்டி - டி.வி.எஸ்., நகர் பகுதியில் ரோடுகளை சீரமைக்க வேண்டும். தெருநாய், மாடுகள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும். விரிவாக்க பகுதியில் பாதாளச் சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் நடக்கவுள்ள அகில இந்திய மாநாடு முடிவு குறித்து பாலசுப்ரமணியன் விளக்கினார். கிளைச் செயலாளர் சிவகுமார், செந்தில் குமார், செல்வம், சக்திவேல் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement