முதியவர் மாயம்
அரியாங்குப்பம் : முதியோர் உதவி தொகை வாங்க சென்ற முதியவர் காணாமல் போனார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 85, இவர், மாதாந்திர முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக, அருகில் உள்ள அரசு வங்கிக்கு, கடந்த 30ம் தேதி சென்றார்.
ஆனால், மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மகள் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement