வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் ரோடு பள்ளம்
பல நாட்களாக வரல தண்ணீர் : நிலக்கோட்டை தாலுகா பிள்ளையார் நத்தம் வடக்கு தெருவில் பல நாட்களாக தண்ணீர் வராததால் மக்கள் கிணற்றில் இருந்து வெகு துாரம் தண்ணீர் எடுத்து செல்கின்றனர் . குடிநீர் சீராக விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ராமகிருஷ்ணன், நிலக்கோட்டை.
மின் கம்பத்தில் செடிகள் : அய்யலுார் பெருமாள்கோவில்பட்டியில் மின்கம்பம் வரை வளர்ந்துள்ள மரக்கிளைகள் மூலம் ஏறும் தேவாங்கு போன்ற அரிய வகை உயிரினங்கள் மின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது. --சுப்பிரமணி, அய்யலுார்.
ரோட்டில் குப்பை குவியல் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு நந்தவனப்பட்டி அருகே ரோட்டில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது .பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் களந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது.
-சின்னத்தம்பி, நத்தவனப்பட்டி.
ரோட்டில் பள்ளம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி டிரசரி காலனியில் ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு விபத்துக்கும் வழி வகுக்கிறது. பள்ளத்தை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - -தங்கமணி, ஒட்டன்சத்திரம்.
மரத்தில் அடிக்கப்படும் ஆணி : திண்டுக்கல் - நத்தம் ரோடு மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர். மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது. ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும்.
-ராணி, திண்டுக்கல்.
சாக்கடையில் அடைப்பு : பழநி கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது .கழிவு தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
-குமரகுரு,பழநி.
எரியாத கோபுர விளக்கு : திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலை மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேர்வீடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் பழுதடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டீஸ்வரன், நத்தம்.