மாநில ஹாக்கி போட்டி
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடந்தது.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். விளையாட்டுத்துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 19 அணிகள் கலந்து கொண்டன.
போட்டி முடிவுகள்:
முதல் காலிறுதி போட்டியில் கோவில்பட்டி அரசு கல்லுாரி 2 - 1 கோல் கணக்கில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியை வீழ்த்தியது. 2வது காலிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி 3 - 2 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தியது.
3வது காலிறுதியில் சவுராஷ்டிரா கல்லுாரி 7 - 6 கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்., கல்லுாரியை வீழ்த்தியது. 4வது காலிறுதியில் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி 3 - 2 கோல் கணக்கில் சென்னை எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி., கல்லுாரியை வீழ்த்தியது.
முதல் அரையிறுதியில் கோவில்பட்டி அரசு கல்லுாரி 1 - 0 கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் சவுராஷ்டிரா கல்லுாரி 3 - 0 கோல் கணக்கில் அருளானந்தர் கல்லுாரியை வீழ்த்தியது.
இறுதிப்போட்டியில் கோவில்பட்டி அரசு கல்லுாரி 5 - 4 கோல் கணக்கில் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியை வீழ்த்தி கோப்பை, ரூ.25ஆயிரம் பரிசுத்தொகையை கைப்பற்றியது.
போலீஸ் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினார். சவுராஷ்டிரா கல்லுாரி ரூ.15ஆயிரம், சுழற்கோப்பை வென்றது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் எஸ்.ஆர்.எம். கல்லுாரி 1 - 0 கோல் கணக்கில் அருளானந்தர் கல்லுாரியை வீழ்த்தியது.