--உலக கராத்தேயில் பதக்கம் வென்றவர்கள்

திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த உலக கராத்தே போட்டிகளில் மதுரை கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.

கட்டா: 9 வயது பிரிவில் சாய் கிஷோர், 10 வயது பிரிவில் பிரவீன், தனபாலன், முகம்மது அக்மல், 11 வயது பிரிவில் கெவின்ராஜ், சுசித்தா, சாய் மாதேஸ்வரன், பிரனில், 12 வயது பிரிவில் தமிழ்ச்செல்வன் முதல் பரிசு வென்றனர்.

7 வயது பிரிவில் மெலோனி லில்லி மேரி, 9வயது பிரிவில் சாய் சாத்விக், 10 வயது பிரிவில் தன்யா, 11 வயது பிரிவில் அபிமன்யு, லியோன் நாத்தன்யேல், 12 வயது பிரிவில் ஜான்ராகவ், 13 வயது பிரிவில் சபரி ஆகாஷ் இரண்டாம் பரிசு வென்றனர்.

10 வயது பிரிவில் சுஜன் தஸ்வின் ராஜா மூன்றாம் பரிசு வென்றனர்.

சண்டை பிரிவு: 9வயது பிரிவில் சாய் சாத்விக், சாய்மாதேஸ்வரன், சாய் கிஷோர், 11 வயது பிரிவில் முகமது அக்மல், ப்ரனில் முதல் பரிசு வென்றனர்.

Advertisement