காரில் தீ; தப்பிய 10 பேர்

ராம்நகர்:

காரில் தீ தப்பிய 10 பேர்



ராம்நகர் பிடதி பகுதியில் நேற்று மாலை ஸ்கார்பியோ கார் சென்றது. காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியதால் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். காருக்குள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் கீழே இறங்கினர்.

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென காரில் தீப்பிடித்தது. அனைவரும் காருக்கு பக்கத்தில் இருந்து துாரமாக சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர் கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும், காரின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஒயர்களில் ஏற்பட்ட உரசலால் தீ ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. புகை வந்ததும் காரில் இருந்து கீழே இறங்கியதால், 10 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement