பள்ளியில் சுற்றுச்சுவர் சேதம்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காம்பவுண்ட் சுவரின் நுழைவு வாயில் பகுதி சேதமடைந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த ஓட்டு கட்டடத்தை இடித்து அகற்றும் பணிக்காக பள்ளியின் கிழக்கு பகுதியில் காம்பவுண்டு சுவர் 10 அடி நீளத்திற்கு அகற்றப்பட்டது. அந்த வழியை பயன்படுத்தி சேதமடைந்த கட்டுமானப் பொருட்கள் இடித்து முழுவதுமாக அகற்றப்பட்டது.
இந்நிலையில் காம்பவுண்ட் சுவரை மீண்டும் கட்டாத நிலை உள்ளதால் பள்ளியில் உள்ள பொருள்களின் பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதால் திறந்த வெளியாக உள்ளது. இதனால் பள்ளியில் உள்ள தளவாடப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் நிலவுகிறது.
எனவே சேதமடைந்த சுவற்றின் வழியை அடைப்பதற்கு புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் ஆடு, மாடு உள்ளிட்டவைகள் தஞ்சம் புகுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.