தொழில்முனைவோர் பயிற்சி துவக்க விழா 

சிவகங்கை: திருப்புவனத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்புத்துார், திருப்புவனத்தில் தேர்வு செய்யப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சியை பி.டி.ஓ.,க்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன மாவட்ட மேலாளர் அருமைரூபன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவிக்னேஸ்வரன், புள்ளியியல் அலுவலர் சரவணக்குமார், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பங்கேற்றனர். பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், வழங்கப்படும் பயிற்சியில் வங்கி கடன் பெறுவது, தொழில் தொடங்கு் முறை, ஆன்லைனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டன.

Advertisement