கட்டுரை போட்டியில் வெற்றி: மாணவருக்கு பாராட்டு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் தர்ஷன் 11, எட்டாம் வகுப்பு மாணவன் தேவதர்ஷன் 12. இருவரும் மாநில அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டியில் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாணவர்களை மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியை ஜோதி, வழிகாட்டி ஆசிரியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement