தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பம் வரவேற்பு 

சிவகங்கை, : மாவட்டத்தில் 2025- 2026ல் புதிய தொழிற்பள்ளிகள் துவக்க, லைசென்ஸ் புதுப்பிக்க, புதிய தொழில் பிரிவுகள் மற்றும் கூடுதல் யூனிட்கள் துவக்க இணையத்தளத்தில் பிப்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்த கல்வி ஆண்டிற்கு (2025- - 2026) புதிய தொழிற் பள்ளிகள் துவக்குதல், லைசென்ஸ் புதுப்பித்தல், புதிய தொழில் பிரிவுகள், கூடுதல் யூனிட்கள் துவக்க www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப, ஆய்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

அனைத்து தொழில் பிரிவுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 கட்ட வேண்டும். அடுத்த ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவக்குதல், லைசென்ஸ் புதுப்பித்தல், தொழிற்பள்ளி நிலையங்களில் புதிய தொழில் பிரிவு, அதில் கூடுதல் யூனிட்கள் துவக்க பிப்.28க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 04575 -- 290 625 என்ற எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement