கடலாடி பால தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூசம்

கடலாடி: கடலாடியில் தண்ணீர் பந்தல் மடாலயம் அமைந்துள்ள இடத்தில் பால தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பிப்.,2ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

மாரியூர் கடலுக்கு சென்று புனித நீராடி முருக பக்தர்கள் விரதம் கடைபிடித்தனர். பிப்.10ல் விளக்கு பூஜை நடக்க உள்ளது.

மறுநாள் பிப்.,11 காலை 8:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களால் கடலாடி நகர்வலம் வந்து பால்குடம் எடுத்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.

பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பகலில் அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement