கூடுதலாக சோலார் மின் உற்பத்தி மையம்; ரூ.30 கோடியில் நிறுவுகிறது மாநகராட்சி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849073.jpg?width=1000&height=625)
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மின் கட்டண செலவுகளைக் குறைக்கும் வகையில் புதிதாக மேலும் ஒரு சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படவுள்ளது.
மின் செலவைக் குறைக்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சோலார் மின் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இரு இடங்களில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் உள்ள 24 ஏக்கர் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் 4.8 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மையம், 28 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பில், 15 ஏக்கர் பரப்பில் உள்ள இடத்தில், 2 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு மையம் ஆகியன செயல்படுகின்றன.
அப்பகுதியில் உள்ள இடத்தில் மேலும் ஒரு சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இங்கு 30 கோடி ரூபாய் மதிப்பில் 5.35 மெகா வாட் திறன் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய மையம் அமைக்கப்படவுள்ளது. இதில் உற்பத்தி செய்யும் மின்சாரம், மின் வாரியத்துக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு 4.96 கோடி ரூபாய் என்ற அளவில் மின் கட்டணம் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான திட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு, ஜெர்மனி கே.எப்.டபிள்யூ., வங்கியில் நிதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளிடம் வரைவு திட்டம் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.வங்கி ஒப்புதல் வழங்கியவுடன் இதற்கான அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளளப்படும். திட்டம் செயல்படுத்த பெறப்படும் கடன் தொகை ஆறு ஆண்டு காலத்தில் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.
'சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சாதகமான அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது' என மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள்; குடிநீர் வினியோகம், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு மாதம் தோறும் சராசரியாக 3 கோடி ரூபாய் என்ற அளவில் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. மின் கட்டணச் செலவை குறைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நிறுவனப்பட்டுள்ள 2 சோலார் மின் உற்பத்தி மையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், நேரடியாக மின் வாரியத்துக்கு வழங்கப்படுகிறது. அதற்கான தொகை, மாநகராட்சி நிர்வாகம், மின் வாரியத்துக்கு செலுத்தும் மின் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படுகிறது. அவ்வகையில், ஆண்டுக்கு ஏறத்தாழ 8 கோடி ரூபாய் வரையிலான மின் கட்டணம் நிர்வாகத்துக்கு சேமிப்பாகிறது.
மேலும்
-
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!
-
சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது
-
அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்