வேலி அமைக்க ரயில்வே முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, வஞ்சிபாளையம் ரோடு, ரயில்வே பாதைக்கு மறுபுறம் உள்ள அப்பல்லோ நகரம், அருள்ஜோதி நகர், ஏ-சிட்டி கார்டன் உள்ளிட்ட பகுதியில் ஏறத்தாழ, 400 வீடுகள் உள்ளன. 30 சாய ஆலை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாய ஆலை நிறுவனத்தினர் ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள இடத்தை பொது பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, ரயில்வே துறையினர் பொதுமக்கள் பயன்படுத்திய இடத்தை இந்த இடம் ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் என கல் நட்டு வைத்து, வேலி அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ரயில்வே துறையினர் வேலி அமைக்க உள் இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதியினர் திரண்டு, 'வேலி அமைத்தால், நாங்கள் வீதியில் இருந்து, வெளியே வர முடியாது. பாதை அடைக்கப்பட்டு விடும். எங்களுக்கான பாதையும் இங்கு உள்ளது. எனவே தடுப்பு அமைக்கக்கூடாது,' என தடுத்து நிறுத்தினர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டது.

தங்களுக்கான பாதையை அளவீடு செய்து கொடுக்க வேண்டு மென கலெக்டரை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement