காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

3

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் பதுங்கி இருந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 7 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் பயங்கரவாதிகள் அல்-பதர் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பாகிஸ்தானின் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டது. பிப்ரவரி 4,5ம் தேதிகளில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய மாதங்களில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement