மஹா கும்பமேளாவில் புனித நீராடிய 40 கோடி பேர்

1

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 40 கோடியை தாண்டியது.


பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது வரும் 26ம் தேதி நிறைவு பெறுகிறது. இங்கு வெளிநாட்டினர் உள்ளிட்ட தினமும் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இன்று( பிப்.,07) 42.80 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதனையடுத்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 40 கோடியை தாண்டியது. கும்பமேளா இன்னும் 19 நாட்கள் நடைபெற உள்ளதால், இங்கு இன்னும் 10 கோடி பேர் புனித நீராடுவார்கள் என உ.பி., அரசு எதிர்பார்க்கிறது.

கடந்த மாதம் அமாவாசை அன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர். இதன் பிறகு மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பேரும், ஜன.,30 மற்றும் பிப்., 1 ஆகிய நாட்களில் தினமும் 2 கோடி பேரும்,பவுர்ணமி அன்று 1.7 கோடி பேரும், வசந்த பஞ்சமி அன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினார்கள்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் பல மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

Advertisement