ஸ்டாலின் அல்வா கடை; பட்டியல் போட்ட அண்ணாமலை!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849141.jpg?width=1000&height=625)
சென்னை; ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம் என்ற முகவரியுடன் அல்வா வகைகள் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்த போது, டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள பிரபல அல்வா கடைக்குச் சென்று அல்வாவை ருசி பார்த்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், திருநெல்வேலி அல்வாவை விட, இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் பேமஸ் என்று கூறினார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அல்வா விமர்சனத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலை தள பதிவின் விவரம் வருமாறு;
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டில்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதே பதிவில் மக்களுக்கு தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதிகளை அல்வா வகைகளாக பெயரிட்டு அதையும் அண்ணாமலை பட்டியலிட்டு இருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;
*கல்விக்கடன் தள்ளுபடி
*பயிர்க்கடன் தள்ளுபடி
*5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி
*சிலிண்டர் ரூ.100 மானியம்
*டீசல் விலை ரூ.4 குறைப்பு
*மாதம் ஒருமுறை மின்கட்டணம்
*100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்
*நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2500
*கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ.4000
*அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்
*காலியாக உள்ள 3,50,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
*பழைய ஓய்வூதிய திட்டம்
இவ்வாறு அண்ணாமலை பட்டியலிட்டு, விமர்சித்துள்ளார்.
![Kjp Kjp](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Rajah Rajah](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![guru guru](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Mohammad ali Mohammad ali](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![என்றும் இந்தியன் என்றும் இந்தியன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![YESPEE YESPEE](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Ray Ray](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![நாஞ்சில் நாடோடி நாஞ்சில் நாடோடி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![கத்தரிக்காய் வியாபாரி கத்தரிக்காய் வியாபாரி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![raja raja](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Raja Raja](https://img.dinamalar.com/data/uphoto/83838_190521597.jpg)
![Gopalakrishnan Balasubramanian Gopalakrishnan Balasubramanian](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
பள்ளி விடுதியில் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்; ராமதாஸ் வேதனை
-
வாரணாசியில் அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மக கும்பாபிஷேகம் கோலாகலம்
-
ஈரோடு கிழக்கு ஓட்டு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தயார் என கலெக்டர் அறிவிப்பு
-
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் படுகாயம்
-
தகவல் சுரங்கம் : கண்டம் தாண்டிய பஸ்