மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி

33

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? என தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.



டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது: மஹாராஷ்டிரா அரசின் தரவுப்படி, மாநிலத்தில் 9.54 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி?


லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் 39 லட்சம் வாக்காளர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர்? வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.



உண்மையான வாக்காளர்களை விட அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்? இந்த வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்களுக்கு வாக்காளர் பட்டியல் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். இது குறித்து தேர்தல் கமிஷன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார். ராகுலின் குற்றச்சாட்டை மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நிராகரித்தார்.


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் கமிஷன் ஏற்கனவே திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ராகுல் தொடர்ந்து பொய்களை கூறி, தன்னை ஆறுதல் படுத்திக் கொள்கிறார். இது தொடர்ந்தால், காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement