கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும்; பிரேமலதா யோசனை

6

சென்னை; கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க.,பொதுச்செயலாளர் பிரேமலதா யோசனை தெரிவித்துள்ளார்.


@1brஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி;


கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் தொடர்ந்து பல பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது.இதை பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். அவர்( கவர்னர்) கோபித்துக் கொண்டு வெளியே செல்வது, மறுபடியும் இவர்கள் (ஆட்சியாளர்கள்) தேநீர் விருந்தில் கலந்து கொள்வது என தொடர்கதையாக போய் கொண்டிருக்கிறது.


ஒரு கவர்னரும், ஆட்சியாளரும் கணவன், மனைவி போல நல்ல புரிந்துணர்வுடன் இருந்தால் தான் இந்த நாட்டுக்கு நல்லது. மக்களுக்கு நல்லது. அதை விட்டுவிட்டு தங்களின் சொந்த விருப்பங்களை மனதில் வைத்து செயல்பட்டால் நிச்சயமாக நாட்டுக்கும், மக்களுக்குமே அது பாதிப்பு.


எனவே இரு தரப்பும் அதை புரிந்து கொள்ள வேண்டும். அவரவருக்கு என்று ஒரு அதிகாரமும், உரிமையும் உள்ளது. புரிந்துணர்வுடன் செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.


இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement