அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849227.jpg?width=1000&height=625)
மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி முன்னேறினார்.
மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஜப்பானின் மெய் யமாகுச்சி மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய மாயா ரேவதி, 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6-2 என தன்வசப்படுத்தினார். முடிவில் மாயா ரேவதி 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். இதில் ஏமாற்றிய ராஷ்மிகா 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரியோன் ஹார்டோனோ ஜோடி 2-6, 6-4, 10-2 என பிரிட்டனின் ஈடன் சில்வா, ரஷ்யாவின் அனஸ்டாசியா டிகோனோவா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி 3-6, 3-6 என இத்தாலியின் நிக்கோல் போசா, கேமில்லா ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் ருதுஜா, பிரிட்டனின் அலிசியா ஜோடி 4-6, 3-6 என ரஷ்யாவின் அமினா அன்ஷ்பா, எலினா பிரிடான்கினா ஜோடியிடம் வீழ்ந்தது.
மேலும்
-
நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி
-
பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜை.
-
ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளுக்கு தடை தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
-
ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது
-
காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு
-
நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி