சர்வதேச கடிதம் எழுத வாய்ப்பு

மதுரை: அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது என கோட்டக் கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஸ் சந்திரா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் நடக்கும் இப்போட்டியில் 9 முதல் 15 வயது வரை உள்ள அனைவரும் பங்கேற்கலாம். இந்தாண்டு 'உங்களை கடலாக கற்பனை செய்துகொண்டு உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்து கொள்ளவேண்டும்' என்ற தலைப்பில் கடிதம் எழுத வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுதலாம். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். சிறந்த 3 கடிதங்கள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம். ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும். அவை தேசிய போட்டிக்கும், அதில் தேர்வு பெறும் கடிதங்கள் சர்வதேச போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். சர்வதேச போட்டியில் தேர்வு செய்யப்படுபவர், சுவிட்சர்லாந்து சர்வதேச தலைமை தபால் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர்.

கடிதங்களை 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002' என்ற முகவரிக்கு மார்ச் 20க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

Advertisement