ஒரு இ.வி.எம்.,மை எண்ண 20 முதல் 25 நிமிடம் 14 டேபிளில் 17 சுற்றில் முடிக்க ஏற்பாடு: கலெக்டர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஓட்டு எண்-ணிக்கை நடக்கும் நிலையில், ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்-திரம் (இ.வி.எம்.,) எண்ணி முடிக்க, 20 முதல், 25 நிமிடமாகும், என கலெக்டர் தெரிவித்தார்.



இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி

இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் இன்று

எண்ணப்படுகி-றது. காலை, 7:30 மணிக்கு தபால் ஓட்டு இருப்பறை திறக்கப்-படும். 8:00 மணிக்கு

இ.வி.எம்., இருப்பறை திறக்கப்படும். 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்கள் முதலில் ஒரு மேஜையில் மட்டும்

எண்ணப்படும். 8:30 மணிக்கு, இ.வி.எம்.,கள் எண்ணிக்கை துவங்கும். தபால் ஓட்டுக்கள், 85 வயதுக்கு

மேற்பட்டோர், மாற்-றுத்திறனாளிகள் என, 246 பேரும், ராணுவத்தில் பணி செய்வோர், 4 பேர், சிறையில்

உள்ள, ஒருவர் என, 251 ஓட்டு பதி-வாகி உள்ளது.


இ.வி.எம்., ஓட்டு எண்ணிக்கை, 14 மேஜையிலும், தபால் ஓட்டு, 1 மேஜையிலும், ஒரே ஒரு வி.வி.பேட்

எடுத்து, ஒரு மேஜை-யிலும் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும், ஒரு ஓட்டு எண்ணும்

கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்-வையாளர் என மொத்தம், 51 பேர் ஈடுபடுவர். ஒரு

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தபால் ஓட்டையும், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மின்னணு

ஓட்டு எண்ணுவதையும் கண்காணிப்பார்கள்.


இவ்வளாகத்தில், 76 'சிசிடிவி' கேமராக்கள், 600 போலீஸ், ஒரு கம்பெனி மத்திய தொழிற்பாதுகாப்பு

படையினர் கண்காணிப்பா-ளர்கள்.
கல்லுாரி வளாகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஒரு கட்டுப்பாட்டு அறை,

அலுவலர்களுக்கு ஒரு அறை, வேட்பா-ளர்கள்- முகவர்கள் பேச ஒரு அறை, ஊடக அறை என

அமைக்-கப்பட்டுள்ளது. மொத்தம், 17 ரவுண்டில் ஓட்டு எண்ணப்படும். ஒரு வேட்பாளரின் பதிவை

டிஸ்பிளேயில் அறிய, 3 முதல், 4 விநாடிகள் ஆகும்.
ஒரு இ.வி.எம்., எண்ணி முடிக்க, 20 முதல், 25 நிமிடங்கள் ஆகும். பரிதா பேகம் என்ற வாக்காளர் ஓட்டை

வேறு நபர் பதிவு செய்து சென்ற சம்பவத்தில், பரிதாபேகம் 'டெண்டர் ஓட்டு' போட மறுத்-துவிட்டார். ஒரு

சிலர் டெண்டர் ஓட்டு போட்டுள்ளனர். தனது
ஓட்டுப்பதிவை மொபைலில் பதிவிட்டு வெளியிட்டவர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement