மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

அரூர்: பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்-சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், கடத்துார் பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நி-லையில், மாணவியை கெடகரஹள்ளியை சேர்ந்த அபிேஷக், 24, என்பவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் அபிேஷக் வீட்டில், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த, 5ல் இருவரும் மணி-யம்பாடி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், அபிேஷக் மாணவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.


மாணவியின் பெற்றோர் புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், அபி ேஷக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.

Advertisement