மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு

சேலம்: சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரியில் ஆய்வக தொழில்நுட்பனராக பணிபுரியும் ஒருவர், பயிற்சி மாணவியரிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, 80 மாணவியர் கையெழுத்திட்டு, கல்லுாரி முதல்வருக்கு புகார் அனுப்பினர்.
கல்லுாரி விசாகா கமிட்டி சேர்மன் சுபா தலைமையில் குழு-வினர், கடந்த, 31, 3, 4ல் விசாரணை நடத்தினர். அதில் மாணவி-யரின் வாட்ஸாப் மொபைலுக்கு தவறான படங்கள், குறுந்தகவல் அனுப்பி பேசியது தெரிந்தது. இதுதொடர்பான அறிக்கை சீலி-டப்பட்டு, சென்னை மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, கடந்த, 4ல் அனுப்பப்பட்டது.


இதுகுறித்து டீன் தேவிமீனாள் கூறுகையில், ''இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என, மருத்துவ கல்வி இயக்-ககம் தெரிவித்துள்ளால் எதுவும் சொல்ல இயலாது,'' என்றார்.


மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி கூறுகையில், ''அறிக்-கையை முழுமையாக ஆராயவில்லை. இதுதொடர்பான நடவ-டிக்கை குறித்து வரும், 10ல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement