இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்

5


வாஷிங்டன்: இன பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டி, தென் ஆப்ரிக்காவிற்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்தி உள்ளார்.


தென் ஆப்ரிக்காவின் பூர்வ குடியில் வெள்ளை ஆப்ரிக்கர்கள் இனம் கிடையாது. அங்கு வசித்து வரும் வெள்ளை ஆப்ரிக்கர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பலர் விவசாய நிலம் வைத்துள்ளனர். இவர்களிடம் இனத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்த்து நிலத்தை அரசு பறித்து வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. வெள்ளை ஆப்ரிக்கர்களிடம் இருந்து நிலம் பிடுங்கப்பட்டால் உங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், இன பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டி, தென் ஆப்ரிக்காவிற்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்தி உள்ளார்.
இன அடிப்படையிலான பாகுபாடால் பாதிக்கப்படும் ஆப்ரிக்கர்களுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தென் ஆப்ரிக்கா வெளியுறவு துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தென் ஆப்ரிக்காவுக்கு கடந்த 2023ம் ஆண்டு கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலரை உதவியாக வழங்கியது. இந்த சூழலில் 2025ம் ஆண்டு நிதி உதவியை நிறுத்தினால் தென் ஆப்ரிக்காவின் பொருளாதாரம், கல்வி ஆகியவை மிகவும் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.


மறுப்பு

இனத்தின் அடிப்படையில், நிலத்தை பறிமுதல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா மறுத்து உள்ளார்.
மேலும் அவர், 'டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன், என்றார்.

Advertisement