'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
கிருஷ்ணகிரி: 'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு, 50 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக அரசு செலுத்த வேண்டும்,'' என்று அ.தி.மு.க., துணை பொது செய-லாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று ஆசிரியர்களால், பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, கிருஷ்-ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் பாலகிருஷ்ணரெட்டி முன்-னிலை வகித்தனர். துணை பொது செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசினார். கிருஷ்ணகிரி நகர செய-லாளர் கேசவன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக் க-ணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முனுசாமி, நிருபர்களிடம் கூறியதா-வது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாணவியருக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. தற்போது பள்ளி வளாகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா-கிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் தடையின்றி கிடைப்பதால், அதை உட்கொள்ப-வர்கள் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்-றனர். அரசு பள்ளிகளில், கல்வி அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தற்போது சி.இ.ஓ., உட்பட எந்த கல்வி அலுவலர்களும் ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், சமூக செயற்பாட்டாளர் களை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்க வேண்டும். அவர்-களுடன் கல்வித்துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
தற்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாண-விக்கு, 50 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் வைப்புத்தொகை-யாக அரசு செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு முனுசாமி கூறினார்.