குடற்புழு நீக்க நாள் பயிற்சி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய குடற்புழு நீக்கநாள் பயிற்சி முகாம் நடந்தது.

மருத்துவ அலுவலர்கள் சுந்தரவள்ளி, ஹேமா தலைமையில் செவிலியர்கள் பாண்டியம்மாள், சாந்தி ஆகியோர், மாணவர்களுக்கு தலா ஒரு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், அவர்கள் கொடுத்த ஒரு மாத்திரையை மட்டும் சாப்பிடுவதை உறுதிசெய்வது, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செவிலியர்கள் மூலம் கண்காணித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினர்.

Advertisement