மத்திய பட்ஜெட் நகல் எரித்து போராட்டம்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகே இந்திய கம்யூ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

அதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்குமர், பரமேஸ்வரன், பிச்சைமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். பட்ஜெட் நகல் எரித்தவர்களை கைது செய்வதற்காக பஸ்சில் ஏற்றினர். பின் பஸ்சை விட்டு இறங்கி விட்டு கைது செய்யவில்லை என தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரும்பி சென்றனர்.

Advertisement