சுருளி அருவியில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த பயணிகள் வலியுறுத்தல்
கம்பம்: சுருளி அருவியில் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வருவதால், வாகன நிறுத்தம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுருளி அருவியில் குளிப்பதற்கென தினமும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மிக தலமாகவும் இருப்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
விசேஷ நாட்கள் குறிப்பாக தமிழ் புத்தாண்டு, பொங்கல், தை, ஆடிமற்றும் மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்த இடமின்றி ரோடுகளின் பக்கவாட்டில் நிறுத்துகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நுழைவு கட்டணம் என்ற பெயரில் சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் கட்டணம் வசூலிக்கிறது.
ஆனால் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித வசதியையும் செய்து தருவதில்லை. மற்ற வசதிகள் இல்லாவிட்டாலும், வாகனங்களை நிறுத்த இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே சுருளி அருவியில் வாகன நிறுத்துமிடம் ஒன்றை அமைக்க ஊராட்சி, வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்