மூடாத பள்ளத்தால் விபத்து அபாயம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850507.jpg?width=1000&height=625)
பெரியகுளம்: வடுகபட்டி சேடபட்டி -பைபாஸ் இணைப்பு ரோட்டின் முன்புறம் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் ஒயர் பதிப்பதற்கு பள்ளம் தோண்டி பணி முடிந்தும், பள்ளம் மூடப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி சேடபட்டி ரோடு வழியாக திண்டுக்கல், தேனி பைபாஸ் ரோடு இணைகிறது. 200 மீ., தூரத்தில் தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டிற்கு செல்லலாம். தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த சேடபட்டி ரோட்டில் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் 3 அடி பள்ளம் தோண்டி தரைவழி ஒயர்கள் பதித்து, மூடி அமைக்கப்பட்டது.
பணி முடிந்து ஒரு மாதம் முடிந்தும் இப்பள்ளம் மூடப்படாமல் உள்ளது.
இதனால் இரவில் டூவீலரில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயப்படுகின்றனர்.சில மாதங்களுக்கு முன் இந்த ரோட்டில் திறந்த வெளி கிணற்றில்டூவீலரில் சென்ற இருவர் விழுந்து, பலியானது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு கிணற்றைச் சுற்றித் தடுப்பு அமைக்கப்பட்டது.
தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி எவ்விதஎச்சரிக்கை அடையாளமும் அமைக்கவில்லை.
அசம்பாவிதம் நடப்பதற்குள் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் பள்ளத்தை மூடி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'