மாணவிகளுக்கான குடியரசு தின குழு போட்டிகள் நிறைவு

தேனி: குடியரசு தின 14வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான மாநில போட்டிகள் நிறைவடைந்தது. மாணவர்களுக்கான போட்டிகள் இன்று துவங்குகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பிப்.,6ல் மாணவிகளுக்கான போட்டிகள் துவங்கின.

ஒவ்வொரு போட்டியிலும் 40 அணிகளைச் சேர்ந்த 5ஆயிரம் மாணவிகள் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆயுதபடை மைதானத்தில் போட்டிகள் நடந்தது.

போட்டிகளில் முதல் இரு இடங்களை வென்ற அணிகள்: கால்பந்து -சேலம், ஈரோடு, கபடி- -தென்காசி, தர்மபுரி, வாலிபால் -சேலம்,ஈரோடு, கூடைப்பந்து -தஞ்சை, துாத்துக்குடி. கைப்பந்து -சேலம், திருவண்ணாமலை, எறிபந்து -சென்னை, தென்காசி, கோ,கோ-: ஈரோடு, தஞ்சை, ஹாக்கி -ஈரோடு, விருதுநகர், பால் பேட்மிட்டன் -ஈரோடு, மதுரை, பேட்மிட்டன்(ஒற்றையர்) -ஈரோடு, சேலம், (இரட்டையர்)-ஈரோடு, கோவை, டேபிள் டென்னிஸ்(ஒற்றையர்)- தேனி, ஈரோடு, (இரட்டையர்) -தேனி, கோவை, டென்னிஸ்(ஒற்றையர்) -சென்னை, கோவை, (இரட்டையர்) -சென்னை, வேலுார் அணிகள் வெற்றி பெற்றன. மாணவர்களுக்கான போட்டிகள் இன்று துவங்கி பிப்.,11ல் முடிகிறது.

Advertisement