தேனியில் இருந்து பழநிக்கு பிப்.,11வரை கூடுதல் பஸ்கள்

தேனி: தைப்பூசத்தை முன்னிட்டு தேனியில் இருந்து பழநிக்கு பிப்.11 வரை கூடுதல் பஸ்கள் இயக்கு ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.,11ல் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தேனியில் இருந்து பழநிக்கு தினமும் 23 பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர நேற்று கூடுதலாக 21 பஸ்கள் இயக்கப்பட்டன. தைப்பூசம்(பிப்.,11) வரை பக்தர்களின் வருகையை கணக்கிட்டு சிறப்பு பஸ்கள் அதிகம் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 40 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement