தி.மு.க., நிர்வாகிக்கு அடி

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பட்டாப்புளி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் 46. தி.மு.க., நகர துணைச்செயலாளர். தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் 42. சேதுராமனை சமூக வலைதளங்களில் அவதூறு

பரப்பியுள்ளார். வடகரை ஸ்டேஷனில் சேதுராமன் புகார் அளித்தார். இதனை அறிந்த கார்த்திக், சேதுராமனை அவதூறாக பேசி அடித்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனை தட்டி கேட்ட சேதுராமன் உறவினர் கோகிலாவையும் அடித்துள்ளார்.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேதுராமன் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.--

Advertisement