மின் மோட்டார் திருட்டு

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி சிந்துவம்பட்டி பகுதி வராகநதி தடுப்பணை அருகே 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து மேல்நிலைதொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 7.5 எச்.பி. மின்மோட்டார், 580 அடி ஒயர், 450 அடி இரும்பு பைப் உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது.

ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-

Advertisement